Sunday, 20 March 2016

மிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்..!! வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன்.





மிளகாய் அரைத்து பூசினால்...
நீதி வழங்கும் மாசாணியம்மன்..!!
வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால்
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு 
நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன்.
அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே கோர்ட்
கோவில் மட்டுமே..!
கோர்ட்டில் நீதி தவறும் ஆனால் கோவிலில் நீதி தவறவே தவறாது.!!
ஒரு ஏழைக்கு அநீதி ஏற்பட்டால் அந்த ஏழை முறையிடபோகமுடியாது.
இன்றைக்கு இருக்கும் உலகத்தில் கோர்ட்படி ஏறி ஒரு ஏழை வெற்றி பெறவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான ஒரு காரியமா?
ஏழைகளின் குறையை கேட்க கூட நாட்டில் ஆள்கள் கிடையாது.
ஏழைகளுக்கு தெரிந்தது எல்லாம் கடவுள் மட்டுமே.
தன்னுடைய குறையை போக்க கடவுளிடம் தான் முறையிடுவார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பொருட்களை வைத்து வேண்டுதல் வைப்பார்கள். அதனை கொண்டு வேண்டுதலை வைப்பார்கள். அது முடிவடைந்தவுடன் மறுபடியும் காணிக்கை செலுத்திவிட்டு தெய்வத்தை வணங்கிவிட்டு வருவார்கள்.
இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு நீதி தேவதை இருந்து இருக்கிறது. அது அனைத்தும் இன்று வரை இருக்கின்றது.
பல ஏழைகள் அதனிடம் சென்று முறையிட்டு தன்னுடைய காரியத்தை நடத்திக்கொள்கிறார்கள்.
ஒன்றும் இல்லாதவன் போலீஸ் ஸ்டேஷன் கூட போகதெரியாது. அவன் எப்படி கோர்ட்படி எல்லாம் ஏறமுடியும்.
அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே கோர்ட் அது கோவில் மட்டுமே. கோர்ட்டில் நீதி தவறும் ஆனால் கோவிலில் நீதி தவறவே தவறாது.

No comments:

Post a Comment