Friday, 18 March 2016

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்! இது சாத்தியம் தானா? சாத்தியமே!

நான் ஏன்
எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!
இது சாத்தியம் தானா? சாத்தியமே!
“எனக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியோ 
அல்லது நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியோ
நான் பதட்டத்துடன் கவலைப்படுவதில்லை.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“முதுமை அல்லது சாவு வருகிறதே என்று நான் பயப்படுவதும் இல்லை,
அல்லது வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி எண்ணி மகிழ்வதுமில்லை.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“வருகின்ற லாபங்களையும் வருகின்ற நஷ்டங்களையும் என் இரு கைகளைப் போல நான் பார்க்கிறேன்.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“அவ்வப்பொழுது நான் புதிய விஷயம் பற்றிய அறிவைப் பெறும் போதெல்லாம்
அது எனக்கு ஞானத்தை நல்குகிறது.
இறுமாப்பை அல்ல.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“நான் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை.
நான் ஏழையாக இருந்த போதும் கூட தேவைகளை மனதில் வைப்பதில்லை.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“நான் மற்றவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்.
துன்பப்படுவோரின் மீது இரக்கமுறுகிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“நான் யாரையும் எனக்குச் சொந்தமானவராகவோ அல்லது எனக்கு அன்னியராகவோ நினைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“நான் அனைத்தையும் நேர்மையுடனும், சுத்தமாகவும், நட்புடன் கூடிய ஆர்வத்துடனும் பார்க்கிறேன்.
ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
சந்தோஷமாக வாழ வழி தெரிகிறதல்லவா!
வாழ்வோம்; வளர்வோம்; அனைவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்!

No comments:

Post a Comment