தெரிஞ்சுக்கோங்க!
ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம்.
மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்.
"username' மற்றும் "domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.
உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி Gomathi@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும்.
yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment