Thursday, 17 March 2016

நம்ம ராமசாமி ஒருநாள் மலேசியாவில் வேகமாக கார் ஓட்டிக் கொண்டு போனார்.. போலீஸ் பிடித்து நிறுத்திவிட்டது.

நம்ம ராமசாமி ஒருநாள் மலேசியாவில் வேகமாக கார் ஓட்டிக் கொண்டு போனார்..
போலீஸ் பிடித்து நிறுத்திவிட்டது..

ஏன் வேகமாகப் போனாய்..? எங்கே உன் உரிமம்..?

உரிமமா..? அப்படின்னா..?

உரிமம் தெரியாதா..? கார் ஆவணங்களை எடு..

ஆவணமா..? இது திருட்டுக் கார்.. என்னிடம் ஏது ஆவணம்..?

ஓ.. திருட்டுக் காரா..? திருடனா நீ..?

இல்லே.. அதுக்கும் மேலே.. கார் டிக்கியில் ஒரு பிணம் இருக்கு.. நான் போட்டுத் தள்ளியது..!


காரியம் கை மீறிப் போவதை உணர்ந்த போலீஸ் அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லி மேலதிகாரியை வரவழைத்தார்..
அவர் வந்து டிக்கியைத் திறக்க..
அங்கே பிணம் இல்லை.

கார் ஆவணத்தைக் கேட்க, டேஷ் போர்டிலிருந்து செல்லுபடியாகும் ஆவணங்களை அமர் எடுத்துக் காட்டினார்.. உரிமம் கேட்க, சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டினார்..

திகைத்துப் போன மேலதிகாரி,
ராமசாமியை பிடித்து நிறுத்திய போலீசை கடிந்து கொண்டார்..
அப்போது அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ராமசாமி சொன்னார்..

வேண்டாம் விட்டுடுங்க சார்.. அவருக்கு வீட்டுல என்ன டார்ச்சரோ..
ரொம்ப கொடைஞ்சீங்கன்னா, அப்புறம் நான் ஓவர் வேகம் போனேன்னு அபாண்டமா என் மேல் பழி சொல்லுவார்..
அதை என்னால் இல்லேன்னு நிரூபிக்க முடியாது..

No comments:

Post a Comment