தண்ணீரும் போக்குவரத்தும்!
பெரு நகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீசார் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம் என்று கணக்கிட்டு, முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.
பெரு நகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் வினாடிகளை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.
உதாரணமாக, ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கிலிருந்து மேற்காக செல்ல வாகனங்கள் "பீக் அவர்' எனப்படும் நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150,120,60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும். சரி போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரம் நிர்ணயிக்கின்றனர்? அங்கே தான் தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த வினாடிகளை நிர்ணயிக்கின்றனர்.
சாதாரணமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தால் அது பாட்டுற்கு சென்று கொண்டே இருக்கும். இதை "தடையற்ற நீரோட்டக் காலம்' என்கின்றனர். இதில் தேங்கி நிற்பது கிடையாது. தடையின்றி ஓடும். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் காலம். இதை "ரன்னிங் ஸ்டேட்' என்கின்றனர். அந்த நேரத்தில் சிக்னல்களில் மிகக் குறைந்த வினாடிகளை நிர்ணயிக்கின்றனர்.
அடுத்தது, "ஸ்லோரன்னிங் ஸ்டேட்' போதுமான சரிவு இல்லாத பாதையில் தண்ணீர் செல்லும் போது மிகவும் மெதுவாக செல்லும். இதை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டே இருக்கும் நிலை இது. இந்த நிலை காலை 8 மணி வரை, இரவு 7 மணிக்கு பின்னர் உள்ள நிலை. இந்த நேரத்தில் "பீக் அவர்' நேரத்தில் பாதியை நிர்ணயிக்கின்றனர்.
அடுத்தது "ஸ்லாக்கிங் ஸ்டேட்' அதாவது தேங்கியிருக்கும் நிலை. தண்ணீர் செல்ல முடியாமல், ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கியிருப்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால், போக்குவரத்து தேக்க நிலையை அடை கிறது. அப்போது ஒவ்வொரு திசையில் இருந்தும் ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதுதான், "பீக் அவர்' எனப்படும் காலை, மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

எனவே, சிக்னலின் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித் தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கின்றனர்.
சிக்னலில் காத்திருக்கும் போது, இனிமேல், அவர்கள் இஷ்டத்திற்கு நேரத்தை வைத்து விடுகிறார்கள் என்று புலம்ப மாட்டீர்கள் தானே!
சிக்னலில் காத்திருக்கும் போது, இனிமேல், அவர்கள் இஷ்டத்திற்கு நேரத்தை வைத்து விடுகிறார்கள் என்று புலம்ப மாட்டீர்கள் தானே!
No comments:
Post a Comment