Friday, 25 March 2016

அரிசி உணவுக்கும் உருளைக்கும் ஒத்துவராது!

அரிசி உணவுக்கும்
உருளைக்கும் ஒத்துவராது!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில், அரிசியில் இருக்கும் அதே கார்போஹைட்ரேட் தான் உருளையிலும் இருக்கிறது. எனவே, அரிசி உணவு சாப்பிடும்போது, உருளைக்கிழங்கு நமக்குத் தேவையில்லை. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சாம்பார் சாதத்துக்கு உருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து விரும்பி சாப்பிடுகிறோம். அரிசி உணவே இல்லாத சமயத்தில் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் உருளைக்கிழங்கை வேகவைத்துதான் உண்ணவேண்டும்.
எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து இல்லாததால், இரவில் சாப்பிடக்கூடாது. ஆனால், இதனுட‌ன் நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள் :

வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள் :
பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.
(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது). வைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. (உக்கிர தெய்வங்கள் நமது குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)
ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும். நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.
ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது. மேரு, ஸ்ரீசக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம், தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்.
தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடுபலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

பாதாமை பயப்படாமல் சாப்பிடலாம்..!

பாதாமை பயப்படாமல் சாப்பிடலாம்..!

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

ஆலயத்தில் விளக்கு ஏற்றுங்கள்..!

ஆலயத்தில் விளக்கு ஏற்றுங்கள்..!
ஆலயத்தில் விளக்கு ஏற்ற நினைத்தால்
அகல்விளக்கு, திரி, எண்ணெய், தீப்பெட்டி, துடைக்க துணி போன்றவற்றை தயாராக எடுத்து செல்ல வேண்டும்.
மற்றவர்களிடம் இருந்து இந்த பொருட்களை வாங்காதீர்கள்.
பிற தீபங்களில் இருந்து உங்கள் தீபத்தை ஏற்றாதீர்கள். நீங்களே தீபம் ஏற்றுங்கள்.
நீங்கள் செய்யும் அபிஷேகம், ஆராதனை போன்றவை உங்களுக்கு உயர்வு தரும்.
எனவே அவற்றை பயபக்தியுடன் செய்யுங்கள்.
எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு பழ வகைகளை படைத்து வழிபாடு செய்வது நல்லது.

Thursday, 24 March 2016

கோவிலில் கடவுளை எப்படி கும்பிட வேண்டும்?

கோவிலில் கடவுளை எப்படி கும்பிட வேண்டும்?

வீட்டில் பூஜை செய்யும் போது கைகளைக் குவித்து வழிபடுவோம். ஆனால், கோயில் வழிபாட்டில் கைகளைத் தலைக்கு மேலே குவித்து வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். கோயில் மூலவருக்கு இந்த முறை பொருந்தும். சிலருக்கு பிரதான சிவனை விட தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் இஷ்ட தெய்வமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில் கைகளை உச்சிக்கு நேராக நன்கு உயர்த்தி தலையில் படாமல் கும்பிட வேண்டும். குருநாதரை வணங்க புருவத்திற்கு நடுவிலும், தந்தையை வணங்க வாய்க்கு நேராகவும், தாயாரை வணங்க வயிற்றுக்கு நேராகவும், மற்றவர்களை மார்புக்கு நேராகவும் கைகுவித்து வணங்க வேண்டும்.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம்?

பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது
வலது கால் பெருவிரவலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும் இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும்

புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது
சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது
அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது

அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது

பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை துhண்டி மேலே எழ வைக்கிறது

தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது
ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப் படுத்துகிறார்கள்

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக் கரணம் போடுகிறோம் இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும் பிள்ளையார்சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்

மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்
ஆறு ஆதாரங்களும் அந்த ஆதாரங்களுக்கு உரிய தெய்வசக்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
ஆதாரம்                      தெய்வசக்திகள்
மூலாதாரம்  ————-           விநாயகர்
சுவாதிட்டானம் ————          பிரம்மா
மணிபு+ரகம்  —————–                 விசணு
அநாகதம்    ————             ருத்திரன்
விசுக்தி           ————-      மகேஸ்வரன்
ஆக்கினை   ————-            
சதாசிவன்
இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஉறஸ்ரார சித்தி ஆகும்
மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்

கோயிலில் வழிபடும் முறை! ************************ கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!

கோயிலில் வழிபடும் முறை!
************************
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!

தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.

ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.

இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

முருகன்
நடராஜர்
தட்சிணாமூர்த்தி
துர்க்கை
சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து,

இறை சிந்தனையுடன் வெளியேற வேண்டும்.

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இணைய பயன்பாட்டின்
சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.
அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.
4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">

7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.
8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

.URL பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.
மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.

படித்ததில் பிடித்தது இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு.. ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

படித்ததில் பிடித்தது

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாட்டின் அரசியலும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்

படித்ததில் பிடித்தது - OUR JUDICIAL SYSTEM... நம் நாட்டில் நீதி துறையின் நிலை.


படித்ததில் பிடித்தது - OUR JUDICIAL SYSTEM...
நம் நாட்டில் நீதி துறையின் நிலை.
ஒரு காட்டிலிருந்து பசு ஒன்று வேகமாக ஓடி கொண்டிருந்தது. வழியில் பார்த்த ஒரு யானை "ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு அந்த பசு "அரசாங்கம் இந்த காட்டிலுள்ள எருமைகளை பிடிக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது" என்று சொன்னது.
அதற்கு அந்த யானை,"எருமைகளை தானே பிடிக்க சொல்லியிருக்கிறது? நீ ஏன் ஓடுகிறாய்" என்று கேட்டது.
அதற்கு பசு," நீ சொல்வது சரி தான். ஆனால் என்னை பிடித்து எருமை என்று சொல்லிவிட்டால், இல்லை, நான் பசு தான் என்று நிரூபிப்பதற்கு 20 வருடங்கள் ஆகுமே. அதனால் தான் ஓடுகிறேன்" என்று சொன்னதை அடுத்து, அந்த யானையும் ஓடத்துவங்கியது.

படித்ததில் பிடித்தது. திரவநிலையில் உள்ள பொருளை மேலும் சூடுபடுத்தினால் அது திடப்பொருளாகுமா ?

படித்ததில் பிடித்தது.

திரவநிலையில் உள்ள பொருளை மேலும் சூடுபடுத்தினால் அது திடப்பொருளாகுமா ?

இந்த கேள்வி பல நாட்டு மாணவர்களிடம் கேட்டாங்க. . .
அமெரிக்க மாணவர் : இதென்ன முட்டாள்தனமான கேள்வி ?

ஜெர்மன் :
திடப்பொருள்தான் உருகி திரவமாகும் . இந்த கேள்வியே தப்பு. . .

ஜப்பான் :
2 நாள் டைம் கொடுங்க.
(2 நாள் ஆன பிறகு ) : சாரி , எனக்கும் தெரியல. எங்க புரபசருக்கும் தெரியல. . .

இந்தியா
(தமிழக மாணவன்) :
இது வெரி சிம்பிள் கொஸ்டின் . .
எல்லாரும் அசந்துட்டாங்க. எப்படி ? எதுனு கொடைஞ்சாங்க. . .
நம்மாளு :
டெமான்ஸ்ட்ரேசனே காமிக்கிறேன் வாங்க. .எல்லாரும் ஓடினாங்க. . .

நம்மாளு :
"தோசை " ய சுட்டு காமிச்சாரு. . . .
(நம்மகிட்டையேவா???)

கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம். இஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு இஷ்டம் !

கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம்.
இஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு இஷ்டம் !

வண்ணத்துப் பூச்சியின் கூடுடைக்கும் போராட்டத்தைப் பார்க்கும் போது,
“அடடா.. எவ்ளோ கஷ்டப்படுது” என மனசில் சிந்தனை ஓடும் இல்லையா ?
அந்தக் கடினமான வேலை இல்லாவிட்டால் வண்ணத்துப் பூச்சி ஆரோக்கியமாய் வெளிவர இயலாது என்பது தானே உண்மை !

நமது கஷ்டங்கள் நீண்டகாலம் தொடர்ந்தால்,
அதன் எல்லையில் மகிழ்ச்சியும் அந்த அளவுக்குப் பெரியதாக இருக்கும் என்பது பெரியவர்களின் மொழி.

இறுகி இறுகிக் கிடக்கும் கரி தானே வைரமாய் மாற முடியும் !
எரிவதற்குப் பயன்படுவதா ?
இல்லை வைரமாய்த் திரிவதற்குப் பயன்படுவதா என்பதை சோதனைகள் தான் முடிவு செய்கின்றன.

ஆகாய விமானத்தின் உடலைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாய் இருக்கிறது. அதை அடைய அது பல கஷ்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதிக பட்ச வெப்பத்தில் அதைப் போடுவார்கள். பின் அதிகபட்சக் குளிரில் போடுவார்கள்.
இப்படிப் பல முறை செய்து அந்த உலோகமானது எந்தக் காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வகையில் மாற்றுவார்கள். அப்படி கடினப் பாதையில் செல்லும் உலோகம் தான் உயர உயரப் பறக்கும்.
அப்படிப் பட்ட சிக்கலைச் சந்திக்காத உலோகம் அடுப்படியில் பாத்திரமாக உருமாறிவிடும் !

ஒவ்வொரு கடினப் பாதையும் நமக்கு நன்மைகளைத் தருவது போல,
நல்ல படிப்பினைகளையும் தருகிறது.

“அனுபவம் ரொம்ப இருக்கு” என ஒருவரைப் பார்த்து எப்போது சொல்வோம் ?. அவர் இத்தகைய சிக்கல்களில் நுழைந்து நுழைந்து வெளியேறி வரும்போது தானே ?

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்யும் மனிதர்கள் பெரும்பாலான கடின நிமிடங்களை இலகுவாகத் தாண்டி விடுகிறார்கள்.
“காலைல இருந்து நைட் வரை வேலையைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு”
என நினைக்காமல்
காலை முதல் மாலையிலான நமது வாழ்க்கை அது, அதை ரசித்துச் செய்வோம்
என நினைத்தால் அந்த கடின நிமிடம் உங்களுக்குப் பிடித்தமானதாய் மாறிவிடும்.

குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..!

குடும்பத்தின் சாவியை
மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..!
வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள்.
குடும்ப வாழ்க்கையில் தனது வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.
ஒரு சுவாரஸ்யமான‌ கதை.....
ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.
கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.
“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”
“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”
“அப்போ பெரிய விஷயங்கள் ?”
“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ? இந்த மாதிரி ! ”
குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள்.
குடும்ப வாழ்க்கையில் தனது வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது..!

ஆண்பாவம் பொசொல்லாதது ! (ஆண்கள் ஸ்பெஷல்)

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது.
பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.
பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.
ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.
கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.
கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.
வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.
ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.
கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.
“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”
“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”
“அப்போ பெரிய விஷயங்கள் ?”
“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”
அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.
ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்.அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.
பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா ?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும் !!!.
மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.
வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன ?
தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.
“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா ? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.
“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி !! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.
என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை..நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா ?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா ?
வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன ?
“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம் !
இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.
ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.
ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான்,  தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.
ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.
பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம்
ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம் ‍
ஆனால் இதயத்தில்
அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

வாழ்த்துகள்.