இந்த புதிய ரயிலில் தான் பணிப்பெண் சேவை முதன் முதலாக ரயிலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்திய ரெயில்வே வரலாற்றில் புதிய உச்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் 'கதிமான் எக்ஸ்பிரஸ்' அதிவேக ரெயில் வரும் 5-ந்தேதி முதல் பயணத்தை துவங்க உள்ளது.
ஆக்ரா முதல் டெல்லி வரை இயக்கப்படும் இந்த ரெயில் 184 கி.மீ தூரத்தை 105-110 நிமிடங்களில் கடந்துவிடும். 12 ஏ.சி. பெட்டிகள், ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளை வரவேற்க 'ரெயில் பணிப்பெண்கள்', இலவச வை-ஃபை இண்டர்நெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல புதிய வசதிகளுடன் இந்த ரெயில் அறிமுகமாகிறது.
இந்த சகல வசதிகள் கொண்ட சொகுசு ரயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 690. நவீன வகுப்பில் பயணிக்க வேண்டுமானால் ரூபாய் 1365 கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.
வரும் 5-ந்தேதி இந்த ரெயிலை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து ரிமோட் மூலமாக அறிமுகப்படுத்தி வைப்பார் என ரெயில்வே துறை சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment