யாளியின் உடலமைப்பு பெரும்பாலும் நான்கு கால்களை கொண்ட ஒரு ராட்சத சிங்கத்தை போன்றும் அதன் தலை மட்டுமே மாறுபடும்.
3.யானை யாளி (யானையின் தலை)
இவை பாலூட்டிகளா முட்டையிடும் வகையை சேர்ந்தவையா என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவை ஊனுண்ணியா?தழையுண்ணியா? என்பதிலும் குழப்பமே.எனினும் இவை ராட்சத உருவமும் யானைகள் ,சிங்கங்களை விட அசுர பலம் வாய்ந்தவைகளாக இருந்திருக்கக்கூடும்.இதற்கு கோவில்களில் யானை மற்றும் யாளி சிற்பங்கள் 1:10 விகிதத்தில் செதுக்கபட்டிருப்பதே சான்றுகள்.
 |
யானையை விட அசுரபலம் கொண்ட யாளி |
சரி யாளிக்கும் தமிழர்கள் தொன்மைக்கும் என்ன சம்பந்தம் ?கி.மு 25 000 களில் யாளிகள் நம்முடன் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நம் சமய கோவிலின் கட்டுமானம் செங்கல்லில் இருந்து கருங்கற்களால் செதுக்கப்பட்டது கி.பி 800 களில் என்றால் இத்தனை காலம் மருவி வந்து கோவில் சிற்பங்களில் ஈட்டி ஏந்திய வீரன் யாளியின் மேல் போர் புரிவது போன்ற சிற்பங்கள் தமிழர்களின் தொன்மையை விளக்குவதன்றி வேறென்ன ?
இன்றும் ஒரு சில பழமையான கோவில்களில் உற்சவர் சிலைகளை சுமந்து வரும் வாகனங்கள் யாளிகள்தான்.
 |
யாளி மண்டபம். |
டைனோசர்களை பற்றி படம் எடுத்த Steven Spielberg போல யாளி பற்றிய படம் எடுக்க ஒரு இயக்குனர் இல்லாமல் போனது வருத்தத்தக்குரியது தான்.எனினும் மத்திய மாநில அரசுகள் புராதாண சிறப்பு மிகுந்த இந்த மிருகத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது தமிழர்களின் பெருமைகளை வைரத்தை பட்டை தீட்டாமல் வைத்திருப்பது போலுள்ளது.
நன்றி
மா.இரவிச்சந்திரன் .
No comments:
Post a Comment