Sunday, 9 October 2016

படித்து தேர்வு செய்யப்பட்ட வரிகளின் தொகுப்பு

01. மரணம் என்பது திரையை விலத்தி ஓர் அறையில் இருந்து இன்னோர் அறைக்கு செல்வதுதான்.


02. கூண்டின் கம்பிகளை திறந்துவிட்டால் நீங்கள் பறவைக்கு தீமை செய்வதில்லை, அதற்கு நன்மைதான் செய்கிறீர்கள், அதுபோன்றதுதான் மரணமும்.

03. இறந்துபோன உங்கள் நண்பர்களுக்காக ஓரளவுக்கு மேல் துயரம் கொள்ளாதீர்கள். அவர்கள் இறக்கவில்லை ஆனால் தமது பயணத்தை முடித்து விட்டார்கள். நாம் எல்லோருமே நமது பயணம் முடிவடைய அந்த வரவேற்பறைக்கு சென்றேயாக வேண்டும்.

04. நாளைபற்றி யோசிக்காதீர்கள் நாளை தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும், இந்தநாளே உயர்ந்தது.

05. உண்மையான நம்பிக்கையுடன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து கடவுளைக் கூப்பிடுபவர்களுக்கு அவர் செவி சாய்ப்பார். அவர்கள் கேட்டது, ஆசைப்;பட்டது கட்டாயம் கிடைக்கும்.

06. கனவுகளைவிட பிரார்த்தனைகளாலேயே அதிக விஷயங்கள் நடக்கின்றன. எனவே உங்கள் குரல் இரவும் பகலும் ஊற்றுப்போல உயரட்டும்.

07. பிரார்த்தனை என்பது வேண்டுதல் மட்டுமல்ல, மனிதனின் கண்ணுக்குத் தெரியாத  சக்தியிலேயே மிகவும் சக்திவாய்ந்த வடிவம் அல்லது வெளிப்பாடுதான் அது.

08. பிரார்த்தனையின் போது உணர்வு நிலையின் அடியின் ஆழத்திலிருந்து ஒரு தீபம் சுடர்விடுகிறது அங்கு மனிதன் தன்னைத்தானே அடையாளம் காண்கிறான்.

09. புவியீர்ப்பு விசையைப் போலவே பிரார்த்தனையும் உண்மையான ஒரு சக்தியாகும். எல்லாமோ தோல்வியடைந்த நிலையில் பிரார்த்தனை இறுதி வெற்றி தந்திருக்கிறது.

10. கவலைக்கான தன்னிகரற்ற மருந்து பிரார்த்தனையாகும்.

11. தெய்வீக உதவியின்றி என்னால் வெற்றிபெற முடியாது அதுபோல தெய்வீக உதவியின்றி என்னால் தோற்கவும் முடியாது.

12. கடவுள் மனிதருடைய செயல்களை கட்டுப்படுத்துகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு குருவி தரையில் விழாது என்றால் அவரது உதவியின்றி ஒரு ராஜாங்கம் உயருமா என்ன ? – பெஞ்சமின் பிராங்கிளின்

13. நம்பிக்கை என்ற சக்தியில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் அது இல்லாதபோது வீழ்ச்சியடைகிறார்கள்.

14. நாம் எப்போதுமே வாழ்வை எளிதாக ஒரேமாதிரியாக வாழ்ந்துவிடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் எல்லோருமே பிரச்சனைகளை, கவலைகளை, பயங்களை உணருகிறோம். இவை வாழ்வின் பாகங்கள் அதிலிருந்து தப்பிவிட யாராலுமே முடியாது.

15. எப்போதுமே வலி, பிரச்சனைகள் வந்தால் அவற்றை சமாளிக்கக் கூடியவாறு உங்கள் மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

16. போராட்டமான நேரத்தில் மனிதனுக்கு உதவக்கூடிய வாசகத்தை கண்டு பிடிக்கும்படி ஒரு ராஜா ஐந்து அறிஞர்களை கேட்டார். அவர்கள் கண்டறிந்து சொன்ன மந்திரம் இதுதான்  – இது கூட கடந்து சென்றுவிடும் -  இதோ அந்த மந்திரப் பாடல் :
துயரத்தில் இருக்கிறாயா தோழா ?
உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்
ஆறுதல் கொள் இதுகூட கடந்து சென்றுவிடும்.
மேன்மையடைந்துவிட்டாயா சந்தோஷத்தில் தள்ளாடாதே
மனதைக் கட்டுப்படுத்து இதுகூட கடந்து சென்றுவிடும்.
ஆபத்தில் இருக்கிறாயா ? மனம் அலை பாய்கிறதா ?
நம்பிக்கை கொள்..! இதுகூட கடந்து சென்றுவிடும்.
போரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா ?
ராஜாபோல திரிகிறாயா ? இதுகூட கடந்து சென்றுவிடும்.
நீ யாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும்
இந்த ஞானமுள்ள வார்த்தையைக் கேள் இதுகூட கடந்து சென்றுவிடும்.

17. உங்கள் துயரத்தை மறந்துவிடுங்கள் அது தண்ணீர் ஓடிச் சென்றதுபோல ஓடிவிடும்.

18. பிரபஞ்சத்தின் அடிப்படையான பொருள் என்பது ஒரு நதி தொடர்ந்து ஓடுவதைப் போல ஓடுகிறது. எல்லா பொருட்களும் தொடர்ந்து மாறுவது மட்டுமன்றி மற்றப் பொருட்களிலும் தொடர்ந்து முடிவில்லா மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

19. நீ ஒரு விளிம்பில் நிற்கிறாய் உனக்குப்பின்னால் கடந்தகாலம் என்ற பாதாளம் முன்னால் எல்லாவற்றையும் விழுங்கப்போகும் எதிர்காலம் இப்போது எதற்காக நீ கவலைப்படுகிறாய் ?

20. வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே ! உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.

21. இன்னும் பிறக்காத வருடங்களின் அனுபவிக்காத சந்தோஷம் இன்று துக்கப்படும் இதயத்தை நாளை துரோகி என்று நிரூபிக்கும். கண்களை கண்ணீர்த் துளிகளுக்கு விசுவாசமற்றதாக்கும்.

22. யோசனையின்றி எடுத்து வைக்கும் அடிகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள். நாளைவரை வாழப்போகும் இருண்ட நாளும் மறைந்துவிட்டிருக்கும்.

23. வாழ்வின் துன்பங்களை, சோதனைகளை கடந்து மேலெழ உதவும் சமநிலை பொறுமையைத் தவிர வேறென்ன இருக்கப்போகிறது.

24. கடலுக்குள் நீண்டிருக்கும் நிலத்தைப்போல நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும்  அது உறுதியாக இருக்கிறது. இறுதியில் அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அடங்கி அமைதியாகின்றன.

25. ஈக்வானிமிடஸ் என்பது ஒரு மந்திரச் சொல் இதன் பொருள் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு மேலாக செல்வதாகும்.

Saturday, 8 October 2016

Confusion to Confidence கோபத்தை குறைக்க...

துறவி ஒருவரை ஒருவன் பார்க்க சென்றான். அவரிடம் தனது நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான். 
அவரும் சம்மதிக்கவே அவன் கேட்டான்,
''எப்போதும் நீங்கள் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்கள். கோபம் கொள்வதே இல்லை. நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை. என் சந்தேகம் என்னவென்றால், நீங்கள் நடிக்கிறீர்களா? உண்மையில் இப்படி இருக்க முடியுமா?''


துறவி சொன்னார், ''அது இருக்கட்டும். இப்போது உன் கைரேகையைப் பார்த்தேன். இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய். ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்''

அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான். வீட்டில் போய் உடனே படுத்துக் கொண்டான். குடும்பத்தார் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னான். எல்லோரும் அழ ஆரம்பித்தனர். சாவு நெருங்கிக் கொண்டிருந்தது. எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும், அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.

அவன் யோசித்தான்,''துறவி தினமும் தியானம் செய்ய சொல்வாரே. நாம்கூட, இப்போது என்ன அவசரம், வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம். பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது?'' என இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.


நான்காவது நாள், அவன் முகம் அழகாக, கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.ஏழாவது நாள் வந்தது. சூரியன் மறையும் நேரமும் வந்தது குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான். அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார். அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.

துறவி அவனிடம் சொன்னார்,''நீ சாக மாட்டாய்.இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது.நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழிஇதுதான். நான் உன்னிடம் என்னதான் சொல்லியிருந்தாலும் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன். இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது. உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?''அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்து துறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

Wednesday, 28 September 2016

புத்திசாலி குடியானவர்கள்....!


ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க,
ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தனர். அதனால் அவர்களை ஜங்ஷனில் உள்ள "லாக் அப்' அறையில் தங்க வைத்தார் பரிசோதகர்.
மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்த குடியானவர்கள், டிக்கெட் பரிசோதகரையும் எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்த பரிசோதகரிடம், இரண்டு டிக்கெட்டுகளையும் காட்டித் தங்களை உடனே விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
""நேற்றே ஏன் காட்டவில்லை?'' என்று அவர் கோபமாகக் கேட்டார்.
""டிராக்டர் வாங்க சென்னைக்கு வந்தோம். எங்களிடம் நிறையப் பணம் இருந்ததால் ஏதாவது லாட்ஜில் தங்கப் பயமாக இருந்தது! நீங்கள் எப்படியும் பாதுகாப்பான இடத்தில் படுக்க வைப்பீர்கள் என்று தெரியும். அதனால்தான் டிக்கெட்டைக் காட்டவில்லை'' என்றார்கள் அந்தப் புத்திசாலிக் குடியானவர்கள்.

ஒரு இளம் தம்பதி...நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். . ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

ஒரு இளம் தம்பதி...

மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"
ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
.
.
.
.
.
.
.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
.
ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

காலதேவி அம்மன் ஆலயம்

காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும்,
பெருமையையையும், வாழ்வியல் நெறிமுறைகளோ டு பின்பற்றி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இருபத்தி 4 மணி நேரத்தையும், கூட்டி கழித்து நல்லது, கெட்டது எது என காலக் கணக்கையும் படைத்து, விஞ் ஞானம் தலைதூக்காத காலத்திலேயே வழி காட்டினர்.
விஞ்ஞானம் ஆயிரம் வடிவங்களில் உயர்ந்து சென் றாலும், ஒருவனின் நேரத்தை இந்த விஞ்ஞானத்தா ல் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!
அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.
கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ” நேரமே உலகம்’.
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்த ல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்குபிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிற து. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திரு க்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகி லேயே இது ஒன்று தானோ?
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படு கிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந் து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேர ம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை .
இந்த காலதேவி. கோயில் பலவடிவங் களில் உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதிவடிமாக 2006 ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஷ்டங்களால் அவதிப் படுவோர்தான் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களின் மன ங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம். அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என் கிறார் குருஜியான சுவாமி தாசன்.
செல்லும் வழி:
சென்னையில் இருந்து மதுரை செல்லவேண்டு ம். பின்னர் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயி ன்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும். தெரியாதவ ர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.
இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
நேரக்கோயில் தகவல்களுக்கு 94421 73049 அழுத்தலம்.

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!


‘ஏழைகளின் ஊட்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
அங்கே
அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு 10நாட்கள் மட்டு மே திறக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்க ளையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஆம் ஹாசனாம்பா கோயில் இருப்ப‍தால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என் றே பெயர் பெற்றிருக்கிறது.
இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியி லிருந்து, ந‌வம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்கோயில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டா லும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.
வினோத நம்பிக்கைகள்!
மாமியார்-மருமகள் கல்! :
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாம ல்வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒருபெண். ஒருநாள்அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள்முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்ல ப்படுகிறது.
அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயி லில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர் ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகி றது. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கு ம் அதிசய கோயில்!
திருடர்கள் கோயில் :
ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச் செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகபோகுமாறு சபித்ததாக சொல்லப்படு கிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘ திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கிறது.
அணையா தீபம் :
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண் டிருக்குமாம்.
கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…:
கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும்உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப் படுகிறது.
வாடா மலர்கள் :
ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறா ர்கள்.
வரலாறும், புராணமும்!
ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்ட ப்பட்டது. இக்கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதோடு, கர்நாடககட்டிடக் கலை யின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிற து. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப் பெயரை பெற்றதாக சொல்ல ப்படுகிறது.
அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டுவந்த ஹாசன்நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர் கள்) வருகைக்குபிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின்படி சப்த(ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரா ணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலி ருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 3கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் 3 கிணறுகளாக 3 கன்னியர்க ளும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.
ஹாசனாம்பா கோயில் திறப்பு!
ஹாசனாம்பாகோயில் ஒவ்வொருஆண்டும் தளவார் குடும்பத்தினர்கோயில் நுழைவாயி லில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்து விடப்படுகிறது.
ஆண் டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படும் ஆபர ணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத் துக்கே எடுத்துச் செல்ல ப்படுகின்றன.

எந்த தெய்வத்தை எத்த‍னைமுறை வலம் வரவேண்டும்! – ஆன்மீக தகவல்


நீங்கள் கோவிலுக்குள் சென்றால், எந்த தெய்வத்தை எத்த‍னை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ள‍னர்.
ஆனால், இன்றோ பெயரளவில் ஓரிரு முறை வலம் வருதல் அல்ல‍து பொதுவாக
எல்லா தெய்வங்களையும் மூன்று முறை வலம் வருதல் என்று வழக்க‍ மாகிவிட்டது.
ஆனால், இது தவறு. கீழே பாருங்கள் ஒவ் வொரு தெய்வத் தையும் நாம் எத்தனை வலம் வர வேண்டும் என்று பட்டியலிடப் பட்டுள்ள‍து.
விநாயகரை நீங்கள் வணங்கி அவரை ஒருமுறை தான் வலம் வர வேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் வணங்கி 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.