Saturday, 13 August 2016

மகிழ்ச்சியை கொடுங்கள், மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’..!

உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வர..


ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொருபலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.


’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

Friday, 12 August 2016

தமிழர்களின் தொன்மைக்கு ஒரு சான்று-யாளி சிற்பங்கள்..!

நம் முன்னோர்கள் நடனக்கலை,சிற்பக்கலை,பண்பாடு ,கலாச்சாரம் ,கல்வி ,கலவி,போர்முறை,வீரம் ,மேலும் பல சான்றுகளை வரலாறாக பதிவிட்டு சென்ற இடம் கோவில்கள்.கோவில்களில் ஒரு விசித்திரமான விலங்கின் சிற்பத்தை நீங்கள் கண்டிருக்ககூடும்.
யாளி
அந்த சிற்பம் சிங்க உடலும் விசித்திரமான. தலைகளும் கொண்ட யாளி எனப்படும் மிருகம்.
ஒன்றை நாம் யோசிக்க தவறிவிட்டோம்.நம் முன்னோர்கள் இந்த சிற்பங்களை வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மிருகமும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நம்மை போல நம்முடன் வாழ்ந்திருக்கிறது.

"அது ஏன் ஒரு கற்பனை சிறப்பாக இருக்கக்கூடாது?" என்ற வினா உங்களுக்கு எழக்கூடும்.தென் இந்தியாவில் பல்வேறு கோவில்களிலும் இந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.அது கற்பனை என்றால் ஒரே கற்பனை பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல சிற்பிகளிடம் தோன்றியது என்பது சாத்தியமில்லாத ஒன்று.மேலும் தென்னிந்தியவை பிரித்து ஆண்டது மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்கள் என்பதால் இவர்கள் சிற்பக்கலைஞர்களும் வேறு வேறாகத்தான் இருந்திருக்கக்கூடும்.


சிங்க யாளி.
யாளியின் வகைகள் :
யாளியின் உடலமைப்பு பெரும்பாலும் நான்கு கால்களை கொண்ட ஒரு ராட்சத சிங்கத்தை போன்றும் அதன் தலை மட்டுமே மாறுபடும்.
1.சிங்க யாளி (சிங்கத்தின் தலை )
2.மகர யாளி (ஆட்டின் தலை)
3.யானை யாளி (யானையின் தலை)
இவை பாலூட்டிகளா முட்டையிடும் வகையை சேர்ந்தவையா என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவை ஊனுண்ணியா?தழையுண்ணியா? என்பதிலும் குழப்பமே.எனினும் இவை ராட்சத உருவமும் யானைகள் ,சிங்கங்களை விட அசுர பலம் வாய்ந்தவைகளாக இருந்திருக்கக்கூடும்.இதற்கு கோவில்களில் யானை மற்றும் யாளி சிற்பங்கள் 1:10 விகிதத்தில் செதுக்கபட்டிருப்பதே சான்றுகள்.
யானையை விட அசுரபலம் கொண்ட யாளி

சரி யாளிக்கும் தமிழர்கள் தொன்மைக்கும் என்ன சம்பந்தம் ?கி.மு 25 000 களில் யாளிகள் நம்முடன் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நம் சமய கோவிலின் கட்டுமானம் செங்கல்லில் இருந்து கருங்கற்களால் செதுக்கப்பட்டது கி.பி 800 களில் என்றால் இத்தனை காலம் மருவி வந்து கோவில் சிற்பங்களில் ஈட்டி ஏந்திய வீரன்  யாளியின் மேல் போர் புரிவது போன்ற சிற்பங்கள் தமிழர்களின் தொன்மையை விளக்குவதன்றி வேறென்ன ?
இன்றும் ஒரு சில பழமையான கோவில்களில் உற்சவர் சிலைகளை சுமந்து வரும் வாகனங்கள் யாளிகள்தான்.
யாளி மண்டபம்.

டைனோசர்களை பற்றி படம் எடுத்த Steven Spielberg போல யாளி பற்றிய படம் எடுக்க ஒரு இயக்குனர் இல்லாமல் போனது வருத்தத்தக்குரியது தான்.எனினும் மத்திய மாநில அரசுகள் புராதாண சிறப்பு மிகுந்த இந்த மிருகத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது  தமிழர்களின் பெருமைகளை வைரத்தை பட்டை தீட்டாமல் வைத்திருப்பது போலுள்ளது.

நன்றி 

மா.இரவிச்சந்திரன் .

10 விதமான இலட்சியங்களை மேற்கொள்ளுங்கள்..!

வாழ்க்கையில் நாம் பலவிதமான இலட்சியங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக எல்லோரும் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாக கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பதும் ஒரு முக்கியமான இலட்சியம் தான். ஆனால் அந்த ஒரு இலட்சியம் மட்டும் போதாது.



10 விதமான இலட்சியங்களை மேற்கொள்ளுங்கள்

1. செல்வம் சேர்ப்பது ஒரு முக்கியமான இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை மறுக்க இயலாது. இருக்க நல்ல வீடு, ஆடம்பரமான கார், விலை உயர்ந்த ஆடைகள், வங்கியில் நிறைய சேமிப்பு, இதெல்லாம் வேண்டும் என்கின்ற இலட்சியம் தேவையானதே.

2. நல்ல தொழில் செய்ய வேண்டும் என்கின்ற இலட்சியமும் கட்டாயம் இருக்க வேண்டும்.  செய்யும் தொழிலில் சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைக்க வேண்டும்.

3. நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்கின்ற இலட்சியமும் அவசியம் தான்.

4. நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்பதும் நல்ல இலட்சியம் தான். நல்ல நண்பர்கள் கிடைத்தால்  உங்கள் வாழ்க்கை  சிறப்பது உறுதி.

5. நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் இலட்சியம் வேண்டும்.

6. நல்ல மன ஆரோக்கியம் பெற வேண்டும் என்கின்ற இலட்சியமும் வேண்டும்.

7. நன்றாக உழைக்க வேண்டும் என்கின்ற இலட்சிய வெறி இருக்க வேண்டும்.

8. தேவைப்படும் போது விடுமுறை எடுத்து புத்துணர்ச்சி பெற வேண்டும்.

9. பல இடங்களுக்கு மற்றும் நாடுகளுக்கு  பயணம் செய்ய வேண்டும். பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டும். பலவிதமான் அனுபவங்களையும், அறிவையும் பெற வேண்டும்.

10. ஆன்மிக வளர்ச்சி அடைய வேண்டும். தன்னை அறிந்து அந்த பரம் பொருளையும் அறிய வேண்டும்.

Thursday, 11 August 2016

மனைவியை மதிப்போம்., மகிழ்வுடன் வாழ்வோம்.. மரணம் வரை மனைவி..!

..வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?
  • கவிஞர் : கண்ணதாசன்
மரணம் வரை மனைவி
====
●ஓர் நாள் இரவு நேரத்தில்
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு
உறங்கிக் கொண்டிருந்தான்..
●அப்போது அவன் கனவில்
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..
●"இந்த கரும்பலகையில்,
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின்
பெயர்களை எழுது" என்றார்..
●அந்த விவசாயும்,
"அப்பா, அம்மா ,
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் ,
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
காதலி , நண்பன்" என
முப்பது பேர் பெயரை எழுதினான்..
●அப்பொழுது கடவுள்,
"கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்.,
நீ யாரை இழக்க முடியும்
என்று நினைக்கிறாயோ,
அந்தப் பெயரை அழி" என்றார்..
●சற்று யோசித்த விவசாயி,
காதலி , நண்பன் என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
●கடவுள் மறுபடியும்,
"இன்னும் இரண்டு பேர்
பெயரை அழி" என்றார்..
●விவசாயும்
கொஞ்ச நேரத்தில்,
"மாமா , அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
●விவசாயி இப்படியே,
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..
●கடைசியாக
அப்பா , அம்மா ,
மனைவி , மகன் , மகள் என
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..
●கடவுள்,
"இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
நீக்க வேண்டும்.,
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்..
●விவசாயி வருத்தத்துடன்
சிறிது நேரம் கழித்து,
அப்பா , அம்மா
பெயரை அழித்தான்..
●கடவுள் மீண்டும்,
"இன்னும் இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்" என்றார்..
●கடவுளுக்கு சற்று
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
"அடுத்ததாக இவன் யார் பெயரை
அழிக்கப்போகிறான்?" என்று..
●அப்போது விவசாயி,
மிகுந்த சோகத்துடனும்
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..
●கடைசியாக கரும்பலகையில்,
"மனைவி" பெயர் மட்டும் இருந்தது..
●கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..
●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு
எதற்காக மனைவி பெயரை
அழிக்கவில்லை?" என்று..
●அதற்கு விவசாயி,
"மகள் எப்படியும்
இன்னொரு வீட்டுக்கு
வாழப் போய் விடுவாள்..
●மகன்,
அவனும் அவனுடைய
மனைவி குழந்தை என வாழ்வான்..
●கடைசி காலம் வரை
என்னோடு வாழக் கூடியவள்
‪#‎என்_மனைவி‬ மட்டும் தான்" என்றான்..
●விவசாயின் பதிலைக் கேட்டு
வியந்து போன கடவுள்,
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..


[ நம்முடைய
வாழ்க்கைத் துணையாக
நாம் இறக்கும் வரை
நம்முடன் வரக்கூடிய
நம்மோடு வாழக்கூடிய🏻
ஒரே உறவு,
மனைவி மட்டும் தான்..
மனைவியை மதிப்போம்., 
மகிழ்வுடன் வாழ்வோம்.... 

Wednesday, 10 August 2016

முன்னோர்கள் உணவு..வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்



வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான் என்று கிராமங்களில் விரக்தியாகச் 
சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய 
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது. ஆனால் நம் 
முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். மருந்தே உணவாக 
இருந்தது என்று கூடச் சொல்லலாம்.


                     அவர்களது சமையலறையில் மருத்துவ 

குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. மிளகு, 
சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) 
என்று பல 
மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர். 
இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் 
சமையல் செய்தனர். மஞ்சள் பொடி முக்கிய இடம் 
வகித்தது. அது உணவுப் பொருள் வேகும் போது 
சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், 
குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் 
பயன் பட்டது. துவரம் பருப்பை அவர்கள் அதிகம் 
சேர்த்துக் கொள்ளவில்லை. பாசிப்பயிரையே அவர்கள் 
அதிகம் பயன்படுத்தியுள்ளனர். காரம் தேவைப்படும் 
போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர். 
கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட 
பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே 
விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

      
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி 
இருக்கிறார்கள். காலையில் நீராகாரத்தை உண்டனர். 
தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 
இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் 
பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை. மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

   
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள். உணவுக்கு 
முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்து
விடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள். 
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின 
முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று 
அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது. பசியினால் 
சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு 
விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை 
தொடமாட்டார்கள். உண்ணும்போது அந்தக் குழாயை 
சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது. இலையில் பதார்த்தங்கள் 
பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு 
வைக்கப்படும். நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள். அதுவும் முதலில் சிறிதளவு 
நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள். இலையைச் 
சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் 
வராது.
     மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய 
உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் 
செல்லும். இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் 
விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தைஉண்ணுவார்கள். அது நெய்யினால் வழுக்கிக் கொண்டுபோவதுடன் உணவுக் குயாயை மேலும் விரித்து விடும்.பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவுஉஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார்சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள். இந்த இரண்டுஉணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும்என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும்ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ளரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம். இதுஉணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ளஅமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகுபோன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும்,மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இதைஇவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், இன்றோநாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி,கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளைஉள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக்கொள்கிறோம். இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்டமிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம்முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.