Wednesday, 23 March 2016

சாதிப்பது மனது..!


சாதிப்பது மனது
“சும்மா நாலு தும்மல் தும்மினாலும், என்ன தான் பயமோ ? உடனே டாக்டரிடம் ஓடுகிறார்கள். நான் சின்ன வயசில தடுப்பூசிக்காகப் போனதுடன் சரி; அப்புறம் இத்தனை வருஷமாச்சு --. டாக்டர் வீட்டு அட்ரஸ் கூடத் தெரியாது எனக்கு.”
கேட்டிருக்கிறீர்களா இதை? அல்லது எப்பொழுதாவது யாராவது எங்காவது பத்திரிகைப் பேட்டிகளில் இப்படிச் சொன்னதைப் படித்துள்ளீர்களா?
”இருந்தாலும் ரொம்ப ஓவர் அலட்டல் இது,” என்று அப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். அவர்கள் மிகைப்படுத்திப் பேசுவதாகவும் எண்ணியிருந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் சிலருக்கு அப்படி ஒரு பாக்கியம் அமைவதுண்டு.
எப்படி சாத்தியம்?
சாதிப்பது மனதுதானாம்!
அதாவது, அவரது மனதின் பாஸிட்டிவ் வடிவமைப்பாம். அது ஆக்க சிந்தனையுள்ள மனது. அதற்காக அவர்களை, சிக்கன் குன்யா, swine flu வைரஸ்களெல்லாம் வெறுத்து ஒதுக்கி ஓடும் என்பது அர்த்தமில்லை. யதேச்சையாய்த் தாக்கும் சில்லறை நோய்களிலிருந்து வலிமையான மனது நம்மைக் காக்கும் என்கிறார்கள்.

மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!

மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!
மாற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் தடை ஒன்று ஏற்படும். மாற்றம் எளிதாய் நிகழவிடாது அந்தத் தடை தடுக்கும். அது நியதி.
“தொந்தி, தொப்பை, மேல் மூச்சு, கீழ் மூச்செல்லாம் வாங்குகிறது. என்னவோ சிக்ஸ் பேக்காமே அதெல்லாம் வேண்டாம், குனிந்து கால் விரலைப் பார்க்க முடிந்தால் உத்தமம்.
அப்பொழுதாவது மனைவி, ஏதேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்க்கக் கூடும்“ என்று ஆசை ஏற்பட, பலநாள் மனப் போராட்டத்திற்குப் பிறகு டயட் முடிவிற்கு வந்திருப்பீர்கள்.
அந்த வாரம் தான் நெருங்கிய உறவின் திருமணமும் நாலைந்து நாள் வைபவமுமாக ஆடு, கோழியெல்லாம் பலவிதத்தில் வடிவமைக்கப்பட்ட உணவு, பிரியாணி, நெய் ஊறும் பலகாரம் (சைவ உணவாளர்கள் பிஸி பேளா பாத்திலிருந்து குலாப்ஜாமூன் வரை [கற்பனை செய்து கொள்ளவும்) என்று உங்கள் முன் தோன்ற……. உங்களது
தீர்மானம் காரியக் கமிட்டி கூட்டமெல்லாம் இல்லாமல் தள்ளி வைக்கப்படும்.
ஒருவழியாய் அது முடிந்தால் அடுத்த வாரம் உங்கள் தெருமுனையில் சுத்தமான, சுகாதாரமான பேக்கரி தொடங்கப்படும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, மணக்கும் சமூசாவும் பக்கோடாவும் இன்ன பிறவும் உங்கள் தீர்மானத்தைத் தள்ளிப் போட வைக்கும். அதற்கடுத்த வாரம் திடீரென ஒரு வேலை நிமித்தம் மனைவி ஊருக்குக் கிளம்பிப் போக நேரிட………. எந்த ஹோட்டலில் டயட் மீல்ஸ் போடுகிறார்கள்? இப்படியே ஏதோவொரு தடை ஏற்பட்டு, ஏற்பட்டு, டயட் தீர்மானம் என்பது காவிரி ஆணையத் தீர்ப்பாக மாறிவிட்டிருக்கும்.
மாற்றம் நிகழத் தடை இப்படித்தான்.
சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீராய் இறைந்து விரயமாகிறதே! இந்த மாதம் எப்படியாவது ஒரு தொகையைச் சேமித்து விடவேண்டும் என்று அந்தப் பெண் மேனேஜர் தீர்மானித்து, “இந்த மாதம் புதுப் புடவை, புதுச் செருப்பு, புது லிப்ஸ்டிக், எல்லாவற்றி்ற்கும் நோ!“ என்று அப்படி இப்படி பணம் சேமித்து வைக்கும் போதுதான் அந்தப் படுகோர விபத்து நிகழும். படு பத்திரமாய் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அவரது ஸ்கூட்டியை இடுத்துத் தள்ளிவிட்டு போயிருப்பான் ஆட்டோக்காரன். இன்ஷுரன்ஸும் இல்லை. மெக்கானிக் பார்த்து விட்டு, ரிப்பேருக்கு அளித்த எஸ்டிமேட் அவரது அந்த மாதச் சேமிப்பையெல்லாம் தாண்டியிருக்கும்! இதில் அவர் பிழை என்ன? ஒன்றும் இல்லை. மாற்றம் நிகழத் தடை, அவ்வளவே!
அங்கே அப்படியென்றால், மற்றொரு குடும்பத்தில் நிகழ்ந்தது என்ன? அங்கே மனைவிக்கு எப்பொழுதுமே குறை.
“உங்களை என்ன ஹீரோ மாதிரியா டிரெஸ் பண்ணிக்கச் சொல்றேன்? கொஞ்சம் மேட்சா, ஷர்ட், கொஞ்சம் அழகான ஷு, ஒரு நல்ல சலூன் விஸிட், அப்படின்னு நாசூக்கா, டீஸென்ட்டா இருக்கச் சொல்றேன்.” எனக் கணவனிடம் முறையிட,
“எல்லாம் இது போதும். இந்த வயசில என்னத்தை ஸ்டைல்?”
“ஸ்டைலைப் பற்றி யாரு சொன்னது? இப்படி ஏனோ தானோன்னு போட்டுக்காம இருந்தா பத்தாது.”
மனைவி மற்றும் பிள்ளைகளின், அங்கலாய்ப்பு, அன்புத் தொல்லை தாங்காமல் அன்று மேட்சாய் டிரஸ் தெரிந்தெடுத்து, அக்கறையாய் அயர்ன் செய்து அணிந்து தெருவில் இறங்கினார் அவர். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது அது தோன்றியது. அவசர அவசரமாய் வீட்டிற்குள் வந்து பார்த்தால்…….. சந்தேகமேயில்லை, பேண்ட் பின்னால் தையல் பிரிந்திருந்தது. “எனக்கு இதெல்லாம் சரிப்படாது. அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்ற இரைச்சல் கேட்டு ஓடிவந்தார் மனைவி.
என்ன பெரிய பிரச்சனை இங்கு?
மாறாதே நீ! அது உனக்கு ஒத்துவராது என்று தடை!
நிகழும்! இப்படியெல்லாம், அல்லது இப்படி ஏதாவது, நிகழும்.
ஆனால் நமக்கு சரிப்படாது என்று பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதோ, முயற்சிகளை கைவிடுவதோ கூடாது.
உணர வேண்டும்!
என்னவென்று?
மாற்றம் எதிர்ப்புக்கு உட்பட்டது என்பதை உணர வேண்டும்.
எனவே மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!

சாமி என் நண்பர்கள் அனைவரும் நல்ல இருக்க வேண்டும்...

சாமி என் நண்பர்கள் அனைவரும் நல்ல இருக்க வேண்டும்...

படித்ததில் பிடித்தது...! அற்புதமான விஷயங்கள்...!!


படித்ததில் பிடித்தது...!
அற்புதமான விஷயங்கள்...!!
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.
அதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவனிடம் சென்று ‘இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்’ என்றான்.
உடனே பிச்சைக்காரன் ‘அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்’ என்றான்.
அதற்கு வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன், ‘ஒரு ரூபாய் அதிகம், நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்’ என்றான்.
பிச்சைக்காரன் அப்படியானால் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்’ என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்கு தந்து விடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்தப் பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன், ‘அட அடி முட்டாளே, கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்து விட்டு எவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே, நன்றாக எமாந்து விட்டாய்’ என்றான்.
அதை கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் ‘யார் முட்டாள்...? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக அதை இழந்து விட்டாய். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்’ என்றவாறே நடக்கலானான்.
இப்படித்தான் நம்மில் பலர்
மிகச் சிறிய சந்தோசங்களுக்காக விலை மதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்..!!

மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது..!

மனக்கணக்கு தவறலாம்,
மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது..!

ஒரு அழகான சிறுமி
தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் ,
நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.
தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தாய் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.
ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல் ,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்
மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது...



‪#‎ரசித்தேன்_பகிர்ந்தேன்‬

நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !

நல்ல சிந்தனைகள்
நல்ல பலனை விளைவிக்கும் !

அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்vகூடிய கண்டம் இருந்தது ; அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ,
'' ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் !..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !''
என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்
..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:
..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் ! தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ..........
.இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ '
பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் '
என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !
' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !

விடக் கூடாதது உத்திரப்பிரதேசத்தில் கயா என்ற புனித கே்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு வருவது வழக்கம்.

விடக் கூடாதது

உத்திரப்பிரதேசத்தில் கயா என்ற புனித கே்ஷத்திரம் இருக்கிறது.
இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு வருவது வழக்கம்.

ஒரு தம்பதியர் அவ்வூருக்குச் சென்றார்கள். தர்ப்பணம் செய்யும்போது பண்டா (குருக்கள்) கணவனிடம், நீங்க எதை விடப் போறீங்க?" என்று கேட்டார்.
அவருக்கு எதையும் விட மனமில்லை. யோசித்துக் கொண்டே இருந்தார்.
கத்தரிக்காயை விடறீங்களா?"
எனக்கு அது ரொம்பப்பிடித்தது" என்றார்.
மீண்டும் கேரட்" என்றார்.
அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் ‘ஏ’ சத்து இருப்பதை விடமாட்டேன்" என்றார்.
சரி,
தக்காளியையாவது விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டால் கால் உளைச்சல் வரும்னு சொல்றாங்க."
அதுதான் இருப்பதில் விலை குறைவானது. அதை விடமாட்டேன்" என்றார்.
அப்படியென்றால் உருளைக் கிழங்கு" என்றார்.
பூரி மசால்னா எனக்கு உசிறு. உருளை இல்லாமல் எப்படி மசால் செய்வது. அதையும் விட மனமில்லை."
பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. சரி, நீங்களே ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்க" என்றார்.

கணவன் ரொம்ப யோசித்தார்.
ஐயா, காசு பணம் செலவழிக்காமல், உடம்பைக் கெடுத்துக்காமல் ஒண்ணே ஒண்ணை விடுறேன்."
என்ன அது?" பண்டா அவசரமாகக் கேட்டார்.
மானம்."
பண்டா, தலையில் அடித்துக் கொண்டே, அம்மா! நீங்க எதை விடுறீங்க?" என்று மனைவியிடம் கேட்டார்.

குருக்களே! இந்த புருஷனை விட்டுடறேன்" என்றார்.
ஏம்மா?"
மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழறது?" என்றார் மனைவி.
- வாரியார் சொற்பொழிவிலிருந்து...