Thursday, 24 March 2022

குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..!

குடும்பத்தின் சாவியை 
மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..! 

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். 
குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை.....
ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். 

குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

படித்ததில் பிடத்தது

படித்ததில் பிடித்தது - OUR JUDICIAL SYSTEM...

நம் நாட்டில் நீதி துறையின் நிலை.

ஒரு காட்டிலிருந்து பசு ஒன்று வேகமாக ஓடி கொண்டிருந்தது. வழியில் பார்த்த ஒரு யானை "ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு அந்த பசு "அரசாங்கம் இந்த காட்டிலுள்ள எருமைகளை பிடிக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது" என்று சொன்னது. 
அதற்கு அந்த யானை,"எருமைகளை தானே பிடிக்க சொல்லியிருக்கிறது? நீ ஏன் ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு பசு," நீ சொல்வது சரி தான். ஆனால் என்னை பிடித்து எருமை என்று சொல்லிவிட்டால், இல்லை, நான் பசு தான் என்று நிரூபிப்பதற்கு 20 வருடங்கள் ஆகுமே. அதனால் தான் ஓடுகிறேன்" என்று சொன்னதை அடுத்து, அந்த யானையும் ஓடத்துவங்கியது.

Tuesday, 22 March 2022

பெண்ணின் மதிப்பு..

பெண்!!! பெண்!!! 
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், 
இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். 
ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். 

இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” 
என்றது. 
அதற்கு கடவுள், 
“இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். 
இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 
அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். 
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 
அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 
இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார். 
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. 
ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, 
“ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை. 
அதற்கு கடவுள், 
“இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில்
துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள். 
ஆச்சரியமான தேவதை, 
“உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். 
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” 
என்றது தேவதை. 
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………

Wednesday, 16 March 2022

சாலமன் ரேகை..

என் வலது ரேகை
படம் இது..ரேகை ஜோதிட சாஸ்திரம் :

கைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு !!

கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும்.26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள். 

ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம். சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது.

Friday, 26 January 2018

மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ராக் பாடகி அலானிஸ் மோரிஸ்ஸெட் (Alanis Morissette) ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். பேச்சுவாக்கில் அவர் சொன்ன ஒரு வாசகம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. “கெஞ்சிக் கேக்குறேன்… அஞ்சே அஞ்சு நிமிஷம் எனக்கு மன அமைதி வேணும்’’ என்பது அந்த வாசகம். உலகமறிந்த ராக் பாடகி… செல்வத்துக்கோ புகழுக்கோ குறைவில்லை… ஆனால், எந்த அளவுக்கு அவர் மன வேதனை அடைந்திருந்தால், மன அமைதி வேண்டும் என்று கேட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம் வசப்பட்டால் போதும்… எதிலும், எங்கும் வெற்றியே! ஆனால், எல்லோருக்கும் எளிதாக அது வாய்ப்பதில்லை. பரபரப்பான மனம்கொண்ட ஒருவரைவிட, மன அமைதியுள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார். தினமும் கொஞ்ச நேரத்தை, மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்… உங்களால் எவ்வளவு அற்புதமாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். இதை எளிமையாகச் சுட்டிக்காட்டும் கதை இது.
நம் ஊரில் வயற்காட்டுக்கு நடுவே பெரும்பாலும் சோளக்கொல்லை பொம்மைதான் இருக்கும். அரிதாக, சில இடங்களில் கீற்றுக்கொட்டகை போட்டிருப்பார்கள். அதுவும் கரும்புப்பாகு காய்ச்ச, கிணற்று மோட்டாரைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட நிலத்தின் சொந்தக்காரருக்கான பிரத்யேக வசதிக்காக அது போடப்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க விவசாயிகள் அப்படி அல்ல. தங்கள் வேளாண் நிலங்களுக்கு நடுவே ஒரு சிறிய கட்டடத்தையே கட்டிவைத்திருப்பார்கள். அதை, ஒரு பெரிய தகர கூரை ஷெட் என்று சொல்லலாம். அதில் கால்நடைகளையும் தானியங்களையும் பாதுகாத்து வைப்பார்கள். அதற்குப் பெயர் `பார்ன்’ (Barn). அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை.
அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு வாட்ச் கட்டியிருந்தார். அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல… சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், விஷயங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார்… அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் காணவில்லை. உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.
அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. “டேய்… பசங்களா!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள். ”இந்தக் கிடங்குக்குள்ள என் வாட்ச் காணாமப் போயிடுச்சு. கண்டுபிடிச்சுக் குடுக்குறவங்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்” என்றார். மாணவர்கள் துள்ளிக்குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.
அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் வாட்ச் கிடைக்கவில்லை. சோர்ந்துபோனவர்களாக வெளியே திரும்பிவந்தார்கள். விவசாயியிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றான் அவர்களில் ஒருவன். அவருக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான்.
“ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு சான்ஸ் தர்றீங்களா? நான் அந்த வாட்ச் கிடைக்குதானு முயற்சி செஞ்சு பார்க்குறேன்’’ என்றான்.
அவர், அவ்வளவு நேரம் அந்தச் சிறுவர்கள் சிரத்தையோடு வாட்ச்சைத் தேடியதைப் பார்த்திருந்தார். இன்னொரு சான்ஸ் கேட்கிறான் இந்தச் சிறுவன். கொடுத்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? “சரி…” என்றார்.
சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக்கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் வாட்ச் இருந்தது. அவருக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.
“தம்பி… நீ மட்டும் எப்படி சரியா வாட்ச்சைக் கண்டுபிடிச்சே?’’ என்று கேட்டார்.
“ஐயா… நான் உள்ளே போய் ஒண்ணுமே செய்யலை. கிடங்குக்கு நடுவுல கண்ணை மூடி உட்கார்ந்துக்கிட்டேன். அஞ்சு நிமிஷம் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில கடிகாரத்தோட `டிக்…டிக்… டிக்…’ சத்தம் கேட்டுச்சு. சத்தம் வந்த திசைக்குப் போனேன். கண்டுபிடிச்சேன். எடுத்துட்டு வந்துட்டேன்.’’

Monday, 29 May 2017

சோடேச பூஜை செய்யும் முறை.. எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?



எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

                   சோடேச பூஜை செய்யும் முறை
 
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள்,சேட்டுகள்,மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம்,மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப்போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும்.அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக,அமாவாசை காலை மணி 10.20 வரை.பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப்பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும்(நாம் வாழும் மில்கி வே,அருகில் உள்ள அண்ட்ராமீடா),சகல உயிரினங்களும்(பாக்டீரியா,புல்,பூண்டு,மரம்,யானை,திமிங்கலம்,சிறுத்தை,கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை,காண்டாமிருகம்,நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு,சுறா மீன் ),ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும்.மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப்பொறுத்தது.மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ,கோயிலிலோ இருக்க வேண்டும்.தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது.வயிறு காலியாக இருக்க வேண்டும்.சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும்.(அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்).நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,பணக்காரனாவது,நோய் தீர,கடன் தீர,எதிர்ப்புகள் விலக,நிலத்தகராறுதீர,பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர,வழக்கு வெற்றி எதுவானாலும்,ஏதாவது ஒன்று மட்டும்)நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.இந்த தியானத்தை ஜாதி,மதம்,இனம்,மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

Friday, 18 November 2016

மிக்கிக்கு மவுசு குறைவதே இல்லை! உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு..!

குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர், வால்ட் டிஸ்னி.
கோபக்கார அப்பாவுக்கும் அன்பான அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர் டிஸ்னி. சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்துவந்தார். இவருக்கு படங்கள் வரைவது ரொம்பப் பிடிக்கும்.
அதனால், ஓவியம் கற்றுத் தரும் தனி வகுப்பில் தன்னை சேர்த்துவிடச் சொல்லி அடம்பிடிக்க, அம்மாவும் சேர்த்துவிட்டார்.
அங்கே, ஓவியத்தோடு, புகைப்படம் எடுக்கவும் கார்ட்டூன்கள் வரையவும் ஆர்வம் மிகுந்தது..
நாளடைவில் கார்ட்டூன் மீது தனி கவனம் குவிந்தது. அவர் வரைந்த புதுமாதிரியான ஓவியங்கள் யாரையும் கவரவில்லை.
அதனால், '
உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியவில்லை' என்று பலரும் சொன்னார்கள். 'இனி நான் வரையப்போகும் கார்ட்டூன் கதாபாத்திரம், உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்' என மனதில் சபதம் கொண்டார்.
அதற்காக பலவிதமான உருவங்களை வரைந்தும் மனம் நிறைவுறாமல் அவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டார்.

அப்போது, தன் அறையில் அங்கும் இங்குமாக தாவித் திரியும் எலி, அவரது கவனத்துக்கு வந்தது. இதற்குமுன் அந்த எலியின் சேட்டைகளைப் பார்த்து ரசித்திருக்கிறார். தான் சாப்பிடும்போதெல்லாம் அதற்கும் கொஞ்சம் கொடுப்பார். அதையே கார்ட்டூனாக வரைந்தார். தனது நண்பர், ஐவர்க்ஸுடன் சேர்ந்து 'மிக்கி மவுஸ்' கேரக்டரை உருவாக்கினார். அதற்குள் மனிதர்களின் குணங்களைப் புகுத்தினார்.
அவர் ஓவியங்களை யாரும் விரும்பாததைப் போலவே, அனிமேஷன் குறும்படங்களும் செல்லுபடியாகவில்லை. எந்த இழப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் மனம் தளராத டிஸ்னி,
1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது.
கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி
'ஸ்டீம் போட் வில்லீ' என்ற படத்தை உருவாக்கினார். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள். உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. படம் வெற்றியடைந்த 1928, நவம்பர் 18-ம் நாளே மிக்கி மவுஸ் பிறந்த நாளானது. உலகமெங்கும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.
படங்களில் வரும் கதாபாத்திரங்களை குழந்தைகள் நிஜம் என்றே நம்பினார்கள். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நிறைந்த கற்பனையான ஊரை நிஜமாக்க வேண்டும்என டிஸ்னி விரும்பினார்.
அப்படித்தான் அமெரிக்காவில் 'டிஸ்னி லேண்ட்' என்ற பிரபல பொழுதுபோக்குப் பூங்கா உருவானது.

கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது.
 .அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகளாக உருவாகின. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.
மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை நாயகன் வால்ட் டிஸ்னி, ''தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.'' என்ற வாழ்க்கை அனுபவத்தைத் தரக் காரணமாக இருந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!