Thursday, 3 March 2016

மனிதர்களுக்கு, உலகை வெற்றி கொள்ள புலன் ஏழு..!

மனிதர்களுக்கு,
கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என ஐந்து புலன் உறுப்புக்கள் உள்ளன.
இவற்றையே ஐம்புலன்கள் என்கிறோம்.
ஒருவர் கூர்மையான புலன் உணர்ச்சியைக் கொண்டிருப்பாரானல் மிகத் திறனுடன் விளங்கலாம். ஒருவரின் புலன் உறுப்புக்கள் நன்முறையில் செயல்பட்டால் அவரின் புலன் உணர்ச்சியும் மிகக் கூர்மையாக இருக்கும்.
உளவியலர் மனித புலன் உறுப்புக்கள் நன்கு செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிய பின்வரும் நியதிகளைத் தெரிவித்துள்ளனர்.
கண்;
நள்ளிரவில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எரியும் மெழுகுவர்த்தி சுடரை காண வேண்டும்.
காது;
இருபது அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் டிக்டிக் ஓசையைக் கேட்க வேண்டும்.
மூக்கு;
நான்கு அறை கொண்ட ஒரு வீட்டில் இரண்டு துளி வாசனை திரவியத்தை தெளித்தால் அவ்வாசனையை உணர வேண்டும்.
நாக்கு;
ஒரு பீப்பாய் தண்ணீரில் கலக்கப்பட்டுள்ள ஒரு கரண்டி உப்பு அல்லது சர்க்கரையின் சுவையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தோல்;
கன்னத்தைத் தொடாமல் ஒரு செண்டி மீட்டர் தொலைவில் பறக்கும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை உணர வேண்டும்.
இவ்வாறு நம் புலன் உறுப்புக்கள் கூருணர்வுடன் செயல்படும் போது நம் நடத்தையும் மிகத் திறமையுடன் விளங்கும்.
மனிதருக்கு ஐந்து புலன்கள் என்பது பொதுக்கருத்து. மனிதருக்கு ஏழு புலன்கள் உள்ளன என உளவியல் தெரிவிக்கிறது.
நம் உடல் சமநிலையுடன் இருக்கிறதா என்பதை உணர்வது ஆறாவது புலனாகும்.
நடுக்காதில் காணப்படும் மூன்று அரைவட்ட குழாய்கள் உடற்சமநிலையை நமக்கு உணர்த்தும் புலன் உறுப்புகளாக செயல்படுகின்றன.
இவை சரியாக செயல்படாவிட்டால் நமக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்படும்.
உடலின் இயக்கத்தையும் உடல் இருக்கும் நிலையையும் உணர்ந்து கொள்வது ஏழாவது புலனாகும். கால் கை மூட்டுகளில் காணப்படும் சில அணுக்கள் நம் உடல் இயங்குவதை நமக்கு உணர்த்துகின்றன.
உலகை வெற்றி கொள்ள ஏழு புலன் உறுப்புகளும் நன்கு செயல்படுவதே இன்றியமையாதது.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (அதிகாரம் 3 – 27)

உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், ஒருவகை.கண்டுபிடிப்புதான்.

உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள
ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும்,
ஒருவகை.கண்டுபிடிப்புதான்.
.
உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து 
உனக்கொரு முகவரியை உருவாக்கி
இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த கண்டுபிடிப்பு - சேவை.
நாம் எதைப் பார்த்தாலும், படித்தாலும் யாருடைய கருத்துகளைக் கேட்டாலும், அதனை உள்வாங்கி வெளிப்படுத்தும்போது
நமது படைப்பானது நமது பாணியில் நம்முடைய Brand-ஆக இருக்க வேண்டும். உள்ளே எடுத்துச் சென்றதை அப்படியே வெளிப்படுத்துவது என்பது உண்டவற்றை வாந்தி எடுப்பதற்கு சமமாகும்.
அப்படியே பிரதிபலிக்க நாம் ஒன்றும் ஜெராக்ஸ் மெஷின் அல்ல. நாம் ஒரு படைப்பு. இறைவனின் அற்புதமான படைப்பு.
ஒன்றைப் போல மற்றொன்றை படைப்பதில்லை இறைவன்.
உலகத்தில் வாழும் மனிதர்களின் கைரேகை ஒருவரைப் போல் இன்னொருவருக்கு இல்லை. அப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் எடுத்துக் கொண்டதை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்?
ஒன்றிலிருந்து மற்றொன்றும், மற்றொன்றிலிருந்து வேறொன்றும், வேறொன்றிலிருந்து இன்னொன்றும், இன்னொன்றிலிருந்து பிரிதொன்றும் உருவாவதுதான் இயற்கை.

Wednesday, 2 March 2016

அருள் மிகு உமைய பார்வதி அம்மன் கோவில் பொங்கல்-விழா-- கொத்தனூர் சேரன் குல பொதுமக்கள்.

உமையபார்வதி அம்மன்துணை.

பொங்கல் விழா-அழைப்பு.
வருகிற 8-3-2016 - செவ்வாய்க்கிழமை மாசிமாதம்
அம்மாவசை-சிவன் ராத்திரி அன்று
கொத்தனுர்
அருள் மிகு உமைய பார்வதி அம்மன் கோவில் 
பொங்கல்-விழா வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் வந்து வழிபட்டு அம்மன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-- கொத்தனூர் சேரன் குல பொதுமக்கள்.
நிகழ்ச்சிநிரல்
08-03-2016-செவ்வாய்க்கிழமை
காலை 7.00-10.00 பொங்கல் வைபவம்
மதியம் 12.00-1.00 சிறப்பு வழிபாடு- தீபாராதனை.மற்றும் அன்னதானம் சிறப்பாக நடை பெற உள்ளது.
-தொடர்புக்கு;9715534322-9597202020

Saturday, 27 February 2016

கைக்கார மனிதன்..!

உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம்

,இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தாலும் எதுவுமே சரி இல்லை. மருத்துவ பேராசிரியர் கூறுகிறார் “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று.
கைய்யா?! ஆச்சரியமாய் இருந்தாலும், உடனே நம் மண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே நிகழ்ச்சி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது.
மற்ற மிருகங்களுக்கு( மனிதனும் ஒரு மிருகம்தான்) இந்த பிரச்சனையே இல்லை……தனக்கேற்ற பெண்ணை பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? அவள் பின்னால் போய் அலைந்து , படக்கென்று இணைந்து, மடக் என்று மரபணுக்களை முதலீடு செய்தோமா, சிம்பிள்! மேட்டர் ஒவர், என்று செயல் படுகின்றன மற்ற மிருகங்கள். ( மிருகங்களில் நாக்கில் தடவுதல், உடம்பில் உராய்தல் போன்றவைகள் உள்ளன)
ஆனால் மனிதர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. முதலில் மனித பெண்ணை போய் பின்னாலிருந்து பிடித்தெல்லாம் உறவுக்கொள்ளவே முடியாத நிலை. காரணம் இவள் மற்ற ஜீவராசிகளை போல நான்கு காலில் நடப்பதில்லையே. இவள் தான் மிக புதுமையாக இரண்டு காலில் நிமிர்ந்து நடக்கிறாளே. நடந்தால் நடந்து விட்டு போகட்டும், அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இதில் தான் பிரச்சனையே!
நான்கு காலில் நடக்கும் விலங்குகளுக்கு கர்பப்பை மல்லாந்த நிலையில் இருக்கும், அதனால் புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது. இப்படி படிந்துகிடக்கும் இந்த கர்ப்பப்பையினுள் மரபணுக்களை செலுத்தினால் அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது, அதனால் மகசூல் அதிகாக இருக்கும். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள். இவள் கர்பப்பையும் இதனால் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, செங்குத்தாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும்…..அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது?
ஆனால் இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்திற்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன. கைகளை வேறூ வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது, இதனால் மற்ற மிருகங்களை விட மிக வேகமாய் முன்னேற முடிந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கலவியின் போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை. அந்த சமயத்திற்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுத்து, மல்லாந்த நிலைக்கு மாற வேண்டி இருந்தது. அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்த பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும்……. அவ்வளவு நேரத்துக்கெல்லாம் சும்மா படுத்து கிடக்க முடியாது, சுத்த போர்! என்று பெண் முரண்டு பண்ணினால் மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ்! ஆக பெண்ணை எப்படியாவது மதிமயக்கி, மல்லாந்து கிடப்பதை ஸ்வாரசியமாக்கினாலே ஒழிய மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பில்லை.
மனித இனத்திற்கு மட்டும் இப்படி ஒரு வினோத தேவை இருந்ததால் தான் இயற்கை மனிதர்களுக்கு மட்டும் என்று சில பிரத்தியேக மாற்றங்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாக தானே இருக்கிறது.
ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவு தானே பெண் எலிக்கும். ஆனால் மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பதில்லையே. பருவம் அடைந்த பிறகு மனித ஆணுக்கு பெண்ணை காட்டிலும் அதிகமான உடல் ரோமம் முளைத்து விடுகிறதே. ஆக மனிதர்களை பொருத்த வரையில் பெண்ணுக்கு உடம்பில் முடி மிக குறைவு, இருப்பதும் மிக மிக சன்னமானதே. ஏன் இந்த வித்தியாசம்? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பான்சியில் கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாதே……பெண் ஆண் இரண்டுக்குமே ஒரே மாதிரியான தோல்முடி தானே அவற்றுக்கு. மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?
ரோமம் அடர்த்தியாக இருந்தால் தொடுதல் உணர்வை துல்லியமாய் கிரகிக்க முடியாது. இதுவே ரோமம் குறைவாக இருந்தால் தொடுகை உணர்வு சுகமாய் தோன்ற ஆரம்பிக்கும். ரோமம் குறைவான மனித பெண்ணின் தோலை தொட்டு, தடவி, வருடி, மென்மையாக உராசினால் போதும்….அவள் நரம்புகளில் மின்சாரம் அதிகமாய் பாய, மூளை கிளர்ச்சிக்குள்ளாகிறது, அவள் மதி மயங்கி ரொம்ப நேரத்திற்கு அறை தூக்கத்தில் படுத்தே கிடப்பாள். இந்த அவகாசத்திற்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் நல்ல மகசூல் கிடைக்குமே!
ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. வெறுமனே பெண்ணின் உடல் ரோமங்களை நீக்கினால் மட்டும் போதாதே. அவள் தோலை பதமாய் கையாளும் பக்குவம் ஆணுக்கும் இருந்தாக வேண்டுமே. இது ஒரு புதிய தேவையாக உருவாகிவிட, இதுவே கலவியல் தேர்வுக்குண்டான ஒரு கோட்பாடாகவும் மாறியது. தன்னை மென்மையாக தொட்டு, வருடி, களிப்புற செய்த ஆண்களையே பெண்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டி மாதிரி தன்னை கையாண்ட ஆண்களை பெண்களை கழற்றிவிட ஆரம்பிக்க, கேட்க வேண்டுமா? கை பதம் இருந்த ஆண்களின் மரபணுக்கள் மட்டுமே பெருவாரியாக பரவின.
இதனால் போக போக ஆண்களுக்கு கைகளின் லாவகம் அதிகரித்துக்கொண்டே போனது…………. இந்த லாவகம் எல்லாம் வெறுமனே பெண்களை தொட்டு தடவுவதற்க்காக மட்டும் இன்றி, மற்ற விஷயங்களுக்கும் பிரயோஜனப்பட்டதால், கல்லை தேய்த்து கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள். இந்த ஒரு சின்ன மாற்றம் மட்டுமே பெரிய பரிணாம வளர்ச்சியை தூண்டிவிட, அதுவரை, குரங்காய் இருந்தவர்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்தார்கள். இந்த நிலை மனிதர்களை நாம் இன்றும், ஹோமோ ஹேபிலிஸ் Homo habilis, (கைக்கார மனிதன்) என்றே அழைக்கிறோம் என்றால் பாருங்களேன், இந்த கைகளின் மகிமையை.

Friday, 26 February 2016

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை..!

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் 
பின்லாந்து கல்விமுறை..!
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான்.
அந்த நேரத்திலும்கூட படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே
முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன்
குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக
மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப்
பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து
வரலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள்
வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக
பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது.
அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக
இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க
வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு
உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான் உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு
ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்எதுவும் இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த
நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.
உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்.
நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே
வருகிறது.

Thursday, 14 January 2016

சிறந்த பக்திக்கு அடையாளம்!! கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர்.

சிறந்த பக்திக்கு அடையாளம்!!

ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர்.

ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர்.

அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.
ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி.
அதற்கு அவள் கணவன்,
அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம்.
கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால்,
அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.
அதற்கு ஹரதத்தர்,
அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.

இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம்.
இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது.
எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.

சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை… தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும்.

சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை…
தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும்.
ஆண்டில் ஒரு நாள் கொண்டாடக் கூடிய விடயம் பண்டிகை என நம் அனைவருக்கும் தெரியும். மாதம் முழுவதும் கொண்டாடப்படும் விடயம் என்னவென்று தெரியுமா…?
ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு தான் அது. தைத் திங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை இறுதியில் அலசுவோம்.
ஜல்லிக்கட்டு – பெயர்க் காரணம் :
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, “சல்லி காசு” எனப்படும் நாணயங்கள் உபயோகத்தில் இருந்தன. இந்த நாணயங்களை காளையின் கொம்பில், ஒரு துணியில் போட்டு கட்டி விடுவார்கள். இதைத் தான் “சல்லி கட்டு” என்றழைத்தனர். இந்த சல்லி கட்டு போட்டியின் முடிவில் வெல்லும் வீரருக்குச் சொந்தமாகும். ” சல்லி கட்டு” என்பதே மருவி பின்னாளில் ” ஜல்லிக்கட்டு” என்றானது.
தோற்றம் :
சிலம்பில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதால், இவ்வீர விளையாட்டு இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பது நம் கருத்து. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது. பாண்டியர்களின் நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறு தழுவுதலை தேசிய விளையாட்டாகக் கொண்ட ஸ்பெயின் நாட்டில் கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் “Bull Bitting” என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு – வகைகள் :
ஜல்லிகட்டில் இரண்டு வகைகள் உள்ளன. வாடிவாசல், வெளிவிரட்டு என்பன அவ்விரண்டு வகைகள். முன்னதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. பின்னது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. பின்னதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும், யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கும்.
சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.
ஜல்லிக்கட்டு – என்ன? எப்படி? :
இந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவதே ஒரு தனிக்கலை எனலாம். இந்தக் காளைகள் எந்த வேலையும் செய்வதில்லை. இவற்றிற்கு பச்சரிசி மாவும், நவதானியங்களும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காளைகள் சற்றேறக் குறைய வளர்ப்பவரின் குணத்தைக் கொண்டிருக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சாதுவாகவே இருக்கின்றன. அதாவது, இவற்றிற்கு இது விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.
மேலும், விளையாட்டினூடே மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே விளையாட்டை நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.
இலக்கியச்சான்றுகள் :
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்’ (கலி.முல்லை.103 63-64)
அதாவது, ஏறு தழுவும் ஆண்களை பண்டைக் காலப் பெண்டிர் விரும்பி மணந்தனராம். ஆயர்குலப் பெண்டிர் தெருவில் பால் மற்றும் பால் பொருட்களினை விற்கும் பணியினை அந்நாளில் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும். இவ்வாறாக முல்லைக் கலி எடுத்தியம்புகிறது.
இந்த ஏறுதழுவுதல் முல்லை நில மக்களால் மட்டுமே போற்றப்பட்ட விளையாட்டு என விவாதம் வைப்பவர்கள் சிலர். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட செய்யுளைப் படித்தால் உண்மை நிலையறியலாம்.
‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’ (மலை.330-335)
– மலைபடுகடாம்.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர் என்பதே இச்செய்யுளின் பொருள்.
இவ்வாறே சிலம்பும்,
‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சுட்டுகிறது.
இன்றைய நிலை :
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின் மனிதர்க்கு உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும், அதன் இலக்கியத் தொன்மையும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே உணர வைத்துள்ளது. அதே நேரம், பணத்திற்காக வெளி நாட்டினர் முன்பாக காளைச் சண்டைகளை நம்மவர்கள் நடத்துவதையும் ஏற்பதற்கில்லை.
ஸ்பெயினில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தவாறே தான் உள்ளது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மட்டுமன்றி மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் மிக மிகக் குறைவே. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
என்ன செய்யலாம் ? :
நடத்தப்படும் வீர விளையாட்டு ஆறறிவு கொண்ட காளையோடல்லாமல் ஐந்தறிவு கொண்ட காளையோடே என்றறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இவ்விளையாட்டை அனுமதிக்கலாம்.
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும்,சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும்,மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை.
தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்