Saturday, 26 September 2015
மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்..!
மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்..

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்….
சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா ? மேனேஜர் கேட்க,
நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார் நம்மாளு.
அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்,
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய் ?
ஒருவரிடம் மட்டும்…
என்ன ஒருத்தர் மட்டுமா ?…
உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.
உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.
சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய் ?
$10,12,347.64
ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா ? என்னென்ன விற்றாய் ?
முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள் ?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார்.
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்
என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் ? மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் – ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.
Friday, 25 September 2015
சேரன் கூட்டம் புங்கந்துறை கொத்தனூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்.-Shanmuga sundharam kg
புங்கந்துறை கொத்தனூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம் பூமி பூஜை பாலக்கால் நட்டு பூஜா செய்த போது எடுத்த படம்
Shanmuga sundharam kg -9715534322 சேரன் கூட்டம்
சேரன் கூட்டம்
சேரன் கூட்டம் என்ற பெயர் சேரமன்னர்களின் உறவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கொங்குச் சேர மன்னர்களுக்கு, குடிமக்களாகவும், படை மக்களாகவும் விளங்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள், வாலசுந்தரக்கவியின் கொங்கு மண்டலசதகம், அக்கினிகுல சேரமன்னர்களுக்கு முடிசூட்டி வைக்கும் உரிமையும் பெருமையும் ஏந்தியவர்கள் கொங்கு வெள்ளாளர் என்பதை ‘’அக்கினி கோத்திரன் புகழ் சேரமான் பெருமான்றனுக்கு வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ் கொங்கு மண்டலமே’’ என்று குறித்துள்ளது. இக்கூட்டத்தார், நீண்ட நெடுங்காலமாகச் சேரமன்னர்களுக்கு உற்ற துணைவர்களாகப் புகழேந்தியதால், இக்கூட்டத்தாரின் சொந்தப் பெயர் மறைந்து, சேரன் கூட்டத்தார் என்று பெயர் வழங்கியிருக்கலாம். சேரமன்னர்கள் கொங்கு வெள்ளாளருக்குக் காணிகள் அளித்து பல ஊர்களிலே கொடியேற்றி கொங்கு நாட்டிலே பயிர்த் தொழிலை விருத்தி செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காணிப்பாடல்களும், கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. எனவே, சேரமன்னர்களை நெருங்கியிருந்ததால், சேர்ந்திருந்தவன், (சே-சேர்-சேரன்-சேர்ந்தவன்) என்னும் பொருளில் சேரன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம், இம்மக்களின் சிறப்பான குலதெய்வம், (குழித்தலை-மதிள்கரை) காவிரித் தென்கரையிலே எழுந்தருளியிருக்கும் செல்லாண்டியம்மன். பூர்வத்திலே, ஆதிநாளில் சேர மன்னர்களின் காணியாளர்களாய் இச்சேர குலத்தினர் கொங்கில் முதலில் குடியேறியிருக்கவேண்டும்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரம். (புங்கன் துறை) கொத்தனூர் பகுதியிலே வாழும் சேரன் கூட்டத்தார்,
கொத்தனூர் செல்லாண்டியம்மனைக் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கொத்தனூர் செல்லாண்டியம்மனுக்கு மதுரை திருமலைநாயக்கன் விட்ட மானிய நிலங்கள் இன்றும் உள்ளன.
இவர்கள் வழிபடும் செல்லாண்டியம்மன், காவிரித் தென் கரையிலே யுள்ள மதிள்கரை செல்லாண்டியம்மனின் நகலாகும்.
கொத்தனூர் சேரன் குலத்திலே ஒரு பத்தினிப் பெண், கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உயிர் நீத்தாள். அந்தப்பத்தினிப் பெண்ணின் நினைவாக, செங்கல்லை அடையாளமாக வைத்து வழிபாடு செய்வார்கள்.
செங்கல் வழிபாட்டுக்கு உரிய தெய்வமாகக் கருதப்பட்டதால், செங்கல் பொடியில் பல் துலக்கமாட்டார்கள். கருங்கல்லால் வீடு கட்டிக்கொள்வார்கள்: குடியிருக்கும் கட்டிடத்திற்குச் செங்கல்லைக் கட்டிடப் பொருளாகப் பயன்படுத்தமாட்டார்கள்.
தென்கரைநாட்டிலே, சிறப்பான குடிமக்களாக வாழ்ந்து வரும் சேரன் கூட்டத்தாரின் குலதெய்வம் நீலம்பூர் காளியம்மன்.
முத்தூர் செல்லக்குமாரசாமி, சேரன் குல காணி தெய்வங்களிலே ஒன்றாகும். முத்தூர் காணிப்பாடல்,
முத்தன்மணியன் முதற்சேரன் வெள்ளம்பர்
மெத்துபொருளந்தையுடன் மேலான-கீர்த்தி
பெறும்
காவலியர் நன்முதலிக்காமருடன் ஏழ்முதன்மை
தாவுபுகழ் முத்துhர்த்தலம்.
என்று குறித்துள்ளது.
முத்தூரில் சேரன் கூட்டத்தார் மூன்றாவது காணியாளர்கள். சேலம் மாவட்டம், கோனூர் கந்தம்பாளையத்தில், காளியம்மன் என்ற தேவி ஆலயம் உள்ளது. இக்காளியம்மனை, கரூர் வட்டாரத்திலே வாழும் சேரன் கூட்டத்தார் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கண்ண குலப் பட்டையத்தில் கீழ்க்கரை பூந்துறை நாட்டில், சிற்றாலந்தூரில் 13-ம் நுhற்றாண்டில், சேரன் குலத்தார் வாழ்ந்த தகவல் குறிக்கப்பட்டுள்ளது. குறும்பு நாட்டில் காணிகொண்டவர்களை,
கார்மேவு சோலை சூழ் குறும்பு நன்னாடனே
கனமான சேரகுலனே.
என்று சேரகுல காணிப்பாடல் குறித்துள்ளது.
வாலசுந்தரக் கவி பாடிய கொங்கு மண்டல சதகம் சேரன் குலத்தின் பெருமையை,
அண்ணறன் சங்கத்தணந்தன மீந்தானகமகிழ
புண்ணிய பூபதிலகனென் றேயுலகம்புகழ
விண்ணிடு திண்பரிசிவிகையு மீந்தனன்
மீனவன்முன்
மண்ணினில் சேரகுல சங்கமன் கொங்கு மண்டலமே.
என்று குறித்துள்ளது.
சேர குலத்தான் பாண்டியனுக்கு முந்திய காலத்திலே தமிழ்ச் சபை வைத்துத் தமிழ்ப் புலவர்களுக்குப் பரிசளித்துப் போற்றிப் பெருமைப்படுத்தினான். தமிழ் வள்ளல்களாக வாழ்ந்தவர்கள் சேரகுலமக்கள்.
கரூர் வட்டார சேரன் குலத்தினர் மணவாடி, புங்குடைய கவுண்டன்புதுhர், வடுகப்பட்டி ஆகிய ஊர்களில் சிறப்புடன் வாழ்ந்துவருகிறார்கள்.
திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல் வாதியுமான கோவை செழியன் சேரன் குலத்தவராவர்.
காணி: கொத்தனூர் (புங்கன் துறை), முத்துhர், நீலம்பூர், கோனுhர், கந்தம்பாளையம், கொடு மணல்.
காணி தெய்வம்: செல்லாண்டியம்மன், கோனூர் காளியம்மன், ராயர், செல்லக் குமாரசாமி, நாட்டுராயன், அண்ணன்மார், கணபதிபாளையம் தங்கநாயகி அம்மன், அத்தனூர் அம்மன், கொடுமணல் தங்கம்மன்.
Subscribe to:
Posts (Atom)